George / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
கொக்குவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்காக கழகங்களுக்கிடையில் நடத்தி வந்த 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய ஜொலிஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம், 8 விக்கெட்களால் வெற்றிபெற்று சம்பியனாகியது.
இந்த சுற்றுப்போட்டியில் சென்லைட்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஜொலிஸ்டார்ஸ் ஆகிய 4 அணிகள் பங்குபற்றியிருந்தன.
ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் பங்குபற்றின, அதில் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. சென்றலைட்ஸ் மற்றும் ஜொலிஸ்டார்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டி, 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை(07) நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துடுப்பாட்டத்தில் சிறந்த வீரர்களைக் கொண்ட அவ்வணி, அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்கள் பெறுவதில் சிரமப்பட்டது.
33.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்;டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சுபாஸ் 18, வி.வினோத்குமார் 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜொலிஸ்டார்ஸ் அணி சார்பாக, என்.பகீரதன் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், ஜி.மதுசன் 8 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களை;கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
126 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்டார்ஸ் அணிக்கு, ஜி.மதுசன், எஸ்.சஜீகன் துடுப்பாட்டம் பக்கபலமாக அமைய 21.3 ஓவர்களில் 2 விக்கெடடுக்;களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஜி.மதுசன் 42, எஸ்.சஜீகன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுக்;களையும் என்.அலன்குமார் கைப்பற்றினார்.
இந்த சுற்றுப்போட்டியில் தொடர் நாயகனாகவும் (152 ஓட்டங்கள், 10 விக்கெட்டுக்கள்), இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் (42 ஓட்டங்கள், 3 விக்கெட்டுக்கள்) ஜொலிஸ்டார்ஸ் அணியின் ஜி.மதுசன் தெரிவு செய்யப்பட்டார்.
13 minute ago
16 minute ago
22 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
22 minute ago
28 minute ago