Gavitha / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணிக்கும் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணி 06:01 கோல்களினால் வெற்றி பெற்று 03 புள்ளிகளை பெற்றுக்கொண்டன.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்டு வரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடருக்கான இவ்வாட்டம் வெள்ளிக்கிழமை (20) மாலை புத்தளம் சாகிறா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
கடந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் இடையில் பெய்த தொடரான கடும் மழையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். நௌபி, எச். ஹம்ருசைன், எம்.ஐ.எம். அலி ஆகியோர் கடமையாற்றினர்.

16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago