Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் போல்டன் அணிக்கும், புத்தளம் லிவர்பூல் அணிக்குமிடையில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றுக்கொண்டன.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடத்தும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டம் சனிக்கிழமை (21) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியானது புள்ளிகள் அடிப்படையிலான தொடர் என்றபடியால் இரு அணிகளும் எவ்வகையிலாவது ஒரு கோலை பெற்றுக்கொள்ள போராடியபோதும் அது கைகூடாமல் போனது.
புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த போல்டன் அணியும் மிகப்பலம் வாய்ந்த லிவர்பூல் அணியும் மிக நீண்ட காலத்துக்கு பிறகு போட்டி ஒன்றில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
மிக நீண்ட காலம் தொடர் சரிவினால் பின்னடைவை சந்தித்து வந்த போல்டன் அணிக்கு புதிதாக இணை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உடற்கல்வி போதனாசிரியர் ஜே.எம்.இல்ஹாம் மற்றும் எம்.சர்ஜூன் ஆகியோரின் புதிய வியூகத்தின் அடிப்படையில் போல்டன் அணியின் பின் வரிசை வீர்கள் இப்போட்டியில் பலமான அரண் அமைத்து தற்காப்பிலேயே முழு நேரமும் கவனம் செலுத்தியதால் லிவர்பூல் அணியின் முன்வரிசை நட்சத்திர வீரர்களால் அத்தடையை உடைத்துக்கொண்டு கோல் புகுத்த முடியாமல் தவித்தமையை காணக்கூடியதாக இருந்தது.
மேற்படி போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.எஸ்.எம். நௌபி, ஏ.எச். உமர் பாச்சா ஆகியோர் கடமையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago