Kogilavani / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
மாஹீர் பவுண்டேசன் அனுசரணையுடன் இற்மேற் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ரிப்டொப் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
சம்மாந்துறை சென்னல் சாஹிறா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(21) இப்போட்டி நடைபெற்றது.
அணிக்கு 8 பேர் கொண்ட 7 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை ரிப்டொப் விளையாட்டுக்கழகமும் சென்னல் செவன் ஸ்டார் விளையாட்டுக்கழகமும் மோதின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னல் செவன் ஸ்டார் அணி 7 ஓவர்கள் நிறைவில் 34 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை ரிப்டொப் விளையாட்டுக்கழக அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த ஓவர்களில் 2 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்று சம்பியனாயினர்.
இற்மேற் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.பௌசான் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் மாஹீர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், செயலாளர் எம்.ஐ.மஜூட், அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.நதார், எஸ்.எல்.நாசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

11 minute ago
15 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
42 minute ago
3 hours ago