Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 பெப்ரவரி 25 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது பெரும் துடுப்பாட்டப் போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை(27) காலை 8.30 மணிக்கு ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஆண்டு, பெரும் துடுப்பாட்ட போட்டிக்கு இலக்கணமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொன் அணிகள் போர், கொலையிலும் வடக்கின் மாபெரும் போர் குழப்பத்திலும் முடிவடைந்தன.
ஆனால் வீரர்களின் போர் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
இரு அணிகளைப் பொறுத்த வரையிலும் ஒரு அணி மற்றைய அணிக்கு சளைத்தவர்கள் இல்லையென்ற நிலைமை காணப்பட்டாலும் கூட, பயிற்சிகள், ஆட்டங்கள் ரீதியாக ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சற்று முன்னிலையில் காணப்படுகின்றது.
ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி, இந்தாண்டு விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒன்றை சமப்படுத்தியும் ஒன்றில் தோல்வியையும் தழுவியுள்ளார்கள்.
பந்துவீச்சு ரீதியாக வேகப்பந்து வீச்சாளர்கள், மத்திய அளவிலான பந்து வீச்சாளாகள் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதுடன், துடுப்பாட்ட ரீதியாகவும் அரைச்சதங்களை பெற்ற பல வீரர்களையும் உள்ளடக்கிய அணியாக காணப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக இரண்டு, மூன்று வருட அனுபவங்களை கொண்ட வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியாகவும் காணப்படுகின்றது.
மகாஜனா கல்லூரி இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்புடன் பயிற்சி ஆட்டங்களை விளையாடியுள்ளார்கள்.
இந்தாண்டில், இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் கண்டதுடன் ஒரு போட்டியை சமப்படுத்தியும் உள்ளார்கள்.
அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்வாங்கிய அணியாக காணப்படுகின்றமை ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து தீர்மானங்களை மேற்;கொள்ளக் கூடியவர்களாகவும் காணப்படுகின்றது.
இவர்களும் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதுடன் அரைச்சதம் பெற்ற வீரர்களையும் துடுப்பாட்ட ரீதியாக கொண்டுள்ளார்கள்.
மகாஜனாக் கல்லூரி அணியினர் டி.சாரங்கன் தலைமையிலும், ஸ்கந்தவரோதயா கல்லூரி வி.சுஜிதரன் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.
இரண்டு நாட்களை கொண்ட போட்டியாக காணப்படுகின்ற போதிலும் இரு அணிகளும் சளைக்காது வெற்றிவாய்ப்பை தமதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இறுதி வரை போராடுவாகள் என்பதில் சந்தேகம் இல்லை.
இதுவரையில் நடந்து முடிந்த 14 போட்டிகளில மகாஜனாக் கல்லூரி 3 போட்டிகளிலும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. 7 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago