2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

41ஆவது தேசிய விளையாட்டு விழா

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

இலங்கையின் 41ஆவது தேசிய விளையாட்டு விழாவையொட்டி விளையாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த வடமேல் மாகாண மட்டத்திலான சைக்கிள் ஓட்டப்போட்டி வியாழக்கிழமை (09) காலை புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டப்போட்டிகள்  ஒரே நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கான போட்டியானது புத்தளத்திலிருந்து புறப்பட்டு ஆனமடு, பள்ளம, பங்கதெனிய ஊடாக 120 கி.மீ.தூரம் தாண்டி மீண்டும் புத்தளம் நகரை வந்தடைந்தது.

பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம் புத்தளம் நகரிலிருந்து புறப்பட்டு முந்தல் நகர் வரையும் சென்று 45 கி.மீ. தூரம் தாண்டி மீண்டும் புத்தளம் நகரை வந்தடைந்தது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான அசோகா வடிகமங்காவ, எம்.டி.எம். தாஹிர், சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் நகர முதல்வரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயக, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், உதவி பொலிஸ்  அதிகாரி சந்தனாயக உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .