Princiya Dixci / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மடத்துல்லா
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட சுப்பர் ஓக்கிட் லீக் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உதவி அதிபருமான பீ. முஹாஜீரின் தலைமையில் அல் - ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நியூ ஸ்டார் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார்.
இறுதிப் போட்டியின்போது முதலில் துடுப்பெடுத்தாடி அட்டாளைச்சேனை மார்க்ஸ்மன் விளையாட்டுக் கழக அணியினர் 08 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
65 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழக அணியினர் 7.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிக் கொண்டனர்.
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சார்பாக முகம்மட் அஸ்லம் 47 ஓட்டங்களைப் பெற்று கழக வெற்றிக்கு வழியமைத்து போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் இச்சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியூ ஸ்டார் அணியின் ஐ. றிசாட் தெரிவு செய்யப்பட்டார்.


39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago