Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2015 ஜூன் 24 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு மகிழடித்தீவு மகிழை அணியினர் இவ் வருடத்துக்கான சம்பியனாக தெரிவாகியுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்ற இப் போட்டிகளில், 35 அணிகள் பங்குபற்றியிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றஇறுதிப்போட்டியில், முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரை எதிர்த்து மகிழடித்தீவு மகிழை அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று, இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவாகினர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பெறுமதிமிக்க பணப்பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை, மற்றும் கூட்டுறவு அமைச்சர் கே. துரைராசசிங்கம் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக இராமகிருஷ்ண மிசன் வித்தியாலய அதிபர், ஆலய பரிபாலன சபை தலைவர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொணடனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago