2025 ஜூலை 05, சனிக்கிழமை

மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடையாளம் சிவில் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும் செயலமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவில் உள்ள நுஃமெராயா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிகள் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படவுள்ளதால் பங்குபற்ற விரும்பும் மகளிர் அணிகள் 0715887085 (விஜய்), 0775490900 (அருள்) போன்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என அடையாளம் சிவில் அமைப்பு அறிவித்துள்ளது.

அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டியாக இப்போட்டி இடம்பெறவுள்ளது. வெற்றிபெறும் அணிகள் மற்றும் வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணம் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .