2025 மே 14, புதன்கிழமை

49ஆவது தேசிய விளையாட்டு விழா

R.Tharaniya   / 2025 மே 13 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

49ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை (10) முந்தல் சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முந்தல் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தியது.

முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஏ.ஐ.எச்.பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டபிள்யூ.ரி.எம்.எஸ்.பி. மல்வில உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் சமூக சேவையாளரும்,தொழிலதிபருமான அஸ்ரின் அலாவுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கணமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சமூக சேவையாளரும்,தொழிலதிபருமான அஸ்ரின் அலாவுதீன் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பனவற்றை வழங்கி கௌரவித்தது டன், தனது அனுசரணையில் குறித்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகை தொப்பிகளையும் முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஏ.ஐ.எச்.பெரேராவிடம் கையளித்தார்.

எம்.யூ.எம்.சனூன்
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X