Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில், பண்டைய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியாக வரலாற்றில் இணையும் இலங்கை பொலிஸ் மெய்வல்லுநர் போட்டிகள், இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி, இன்றுடன் (28) பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் முடிவடைந்துள்ளது.
83ஆவது தடவையாக நடத்தப்படும் இந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இறுதி வைபவத்தில் பிரதம அதிதியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்ததுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ விசேட அதிதியாகவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்தப் மெய்வல்லுநர் போட்டிக்காக, 58 பொலஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர். அத்துடன், போட்டிகளுக்கு மேலதிகமாக, 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களின் அஞ்சல் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.
பொலிஸ் மெய்வல்லுநர் போட்டி, இலங்கையில் முதல் முறையாக, 1902ஆம் ஆண்டு, பொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில் நடைபெற்றதுடன், இப்போட்டியை, அப்போது சிலோன் பொலிஸ் என்று அழைக்கப்பட்ட இலங்கைப் பொலிஸின் நான்காவது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய மேஜர் எஃப்.நாலிஸ் ஆரம்பித்து வைத்தார்.
1ஆவது மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்த வீரருக்கு வழங்கப்பட்ட விருது, மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்பக் கர்த்தாவாகிய மேஜர் எஃப்.நொலிஸாலேயே வழங்கப்பட்டுள்ளது.
1902ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் மெய்வல்லுநர் போட்டி 1926ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோரும் பம்பலபிட்டி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .