2025 மே 09, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்துக்கு மின்னொளி

Shanmugan Murugavel   / 2025 மே 04 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்லம் எஸ். மெளலானா

அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளியூட்டும் வேலைத் திட்டம் அக்கரைப்பற்று மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகிறது.

இரவு வேளையில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த மைதானத்தில்  போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக விளையாட்டுக் கழகங்களும் பொதுமக்களும் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன் இம்மைதானத்திற்கு மின்விளக்குகள் பொருத்தி, ஒளியூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து ஆணையாளர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக மாநகர சபையின் சொந்த நிதியின் மூலம் மின்னொளியூட்டும் வேலைத் திட்டம் வெள்ளிக்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரம் அங்கு புதிதாக மின் கம்பங்கள் நிறுவப்பட்டு, பிரகாச மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மைதானம் மின்னொளியூட்டப்படுதால் அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தடுக்கப்படுவதுடன் இரவு நேரங்களில் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கிறது.

தமது வேண்டுகோளையேற்று இத்துரித நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக விளையாட்டுக் கழகங்களும் பொது மக்களும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X