Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.அறூஸ்
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற அட்டாளைச் சேனை தேசிய பாடசாலை மாணவன் என்.அப்துல்லாஹ்வை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் நடைபெற்றது.
அட்டாளைசேனை தேசிய பாடசாலையில் அதிபர் ஏ.எல்.கமரூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாதனை படைத்த மாணவன் அப்துல்லாஹ் ,அவரது தந்தை மற்றும் பாடசாலை பிரதி அதிபர் ஏ.சீ.எம்.ஹரீஸ், விளையாட்டுப் பயிற்று விப்பாளர் எம்.ஏ.எம்.ரஸ்பாஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் என். அப்துல்லாஹ், 1.47 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக 1 தங்கப்பதக்கமும் 2 வெள்ளிப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்தமாக 5 பதக்கங்களே பெறப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .