2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதி சிறந்த மெய்வல்லுநர் வீரராக ரவிந்து

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுநர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுநர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார்.

இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்களைப் பதிவு செய்த ரவிந்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இவ்வருட முற்பகுதியில் ஹொங்கொங்கில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரியின் நவிஷ்க சந்தேஷை இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநரில் ரவிந்து டில்ஷான் தோற்கடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், இம்முறை அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுநரில் சுவட்டு நிகழ்ச்சிகளுக்கான அதிசிறந்த ஓட்ட வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், வருடத்தின் அதி சிறந்த பெண் மெய்வல்லுநராக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.48 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷெலிண்டா ஜென்சன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X