2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

அல் அஷ்ரக், அல் மதீனா மாணவர் கெளரவிப்பு

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். ஸாகிர்

அகில இலங்கை பாடசாலை ரீதியாக நிந்தவூரில் நடாத்தப்பட்ட கபடிப் போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற கல்முனை அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் 17 வயது ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அல் மதீனா தேசிய பாடசாலை மாணவர்கள் தார்மீக சமூகத்துக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பான சம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற சிரேஷ்ட வீரர்களும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கம் வென்றவர்களையும் மெய்வல்லுநர் போட்டியில் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்துவரும் வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .