Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- றாசிக் நபாயிஸ்

மருதமுனை அல் - மதீனா வித்தியாலய கால்பந்தாட்ட அணிக்கான மேலங்கி தொகுதியை ஜப்பானில் வசிக்கும் மருதமுனை நண்பர்கள் வட்டத்தின் சார்பாக அதன் உறுப்பினர் எம்.எல்.கே.எம். ஜம்சித்தால் பாடசாலையின் அதிபர் ஏ. குனுக்கத்துல்லாஸிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு இவ்வாறான சீருடைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை உண்டாக்குவதுடன் ஒரு ஊக்குவிப்பு நிலையை உருவாக்கி விளையாட்டின் மூலம் நல்லதொரு இளையோர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான முன்னெடுப்புக்கள் செய்யப்படுகின்றன என ஜம்சித் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்திட்டங்கள் இதற்கு முன்னர் பெரியநீலாவணை அக்பர் வித்தியாலய மாணவர்களுக்கும், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவர்களுக்கும் கால்பந்தாட்ட அணிக்கான மேலங்கி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago