Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Janu / 2023 ஜூன் 06 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் முன்னோடி ஆசிரியர் அலியார் பைசர், இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக இவ்வாண்டு தொடக்கம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையான ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பூப்பந்தாட்டச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக சபைத் தேர்தலும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர்கள் அடங்கிய தேர்தல் குழுவின் தலைமையில் இலங்கை பூப்பந்தாட்டச் சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே பைசர் தெரிவுசெய்யப்பட்டார்.
உப தலைவர் பதவிக்காக 16 பேர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் மூவர் தமது வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டனர். ஏழு பேர்கள் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு இணங்க அலியார் பைசர் அவர்களும் அதில் ஒருவராக அதிகப்படியான வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago