Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் உதைபந்தாட்ட லீக்கின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மது யமீன், செயலாளர் அப்துல்லா முராத் மற்றும் பொருளாளர் முஹம்மது ரஸ்லான் ஆகியோர் புதன்கிழமை (11) அன்று இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவரான ஜஸ்வர் அவர்களை சந்தித்து புத்தளத்தின் உதைபந்தாட்ட அபிவிருத்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
எதிர்வரும் காலங்களில் பல்வேறு உதைப்பந்தாட்ட தொடர்கள் மற்றும் நிதி அனுசரணைகளை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஊடாக புத்தளம் உதைபந்தாட்ட லீக்கிற்கு வழங்குவதாக அதன் தலைவரான ஜஸ்வர் இதன் போது புத்தளம் லீக்கின் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
மேலும் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கிற்கு முதல் கட்டமாக 05 பந்துகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
புத்தளம் உதைபந்தாட்ட லீக்கின் முன்னாள் செயலாளரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன முன்னாள் பொருளாளருமான ஜே.எம். ஜௌஸி அவர்களின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்
4 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
28 minute ago