2025 ஜூலை 03, வியாழக்கிழமை

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான இலங்கைக் குழாமில் வடக்கின் இருவர்

குணசேகரன் சுரேன்   / 2019 மே 08 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் தகுதி காண் போட்டியில் விளையாடவுள்ள 31 பேர் கொண்ட வீரர்கள் குழாமை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

இதில், வடக்கைச் சேர்ந்த வீரர்களான செபமாலை நாயகம் யூட் சுபன், சந்தியமரியதாஸ் நிதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழாமே, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன ஆசியக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .