Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 31 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச விளையாட்டு விழாவில் ஆண் மற்றும் பெண்களுக்கான எல்லே போட்டி ஞாயிற்றுக்கிழமை (30) செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விஜயராஜா அனுசன் தலைமையில் நடைபெற்றது.
பெண்களுக்கான எல்லே போட்டியில் ஆறு விளையாட்டுக் கழக அணிகள் பங்கு பற்றின. இறுதிப்போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் சவுக்கடி ஆதவன் விளையாட்டுக் கழகம் தெரிவுசெய்யப்பட்டன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி 25 பந்துகளில் ஆறு ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சவுக்கடி ஆதவன் விளையாட்டுக் கழக அணி எந்தவித ஓட்டத்தினையும் பெறவில்லை. இதனடிப்படையில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி ஆறு ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான எல்லே போட்டியில் ஒன்பது விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றின. இறுதிப்போட்டியில் ஆறுமுகத்தான் குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகம் மற்றும் களுவன்கேணி பாரதி விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆறுமுகத்தான் குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழக அணி 30 பந்துகளில் நான்கு ஓட்டத்தைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுவன்கேணி பாரதி விளையாட்டுக் கழக அணி ஒரு ஓட்டத்தினை மாத்திரமே பெற்றது. ஒட்டங்களின் அடிப்படையில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற இரு அணிகளும் மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரின்பராஜா சபேஷ்
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago