2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

எல்லே போட்டியில் செங்கலடி இளைஞர் பிரதேச கழகங்கள் சம்பியன்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட  இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் கழகங்களுக் கிடையிலான எல்லே சுற்று போட்டி  மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா  மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கப்போடி சசிகுமார்  தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் 05 ஆண்கள் அணிகளுக்கும் 05 மகளிர் அணிகளும் கலந்து கொண்டன.இறுதிப்போட்டியில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச இளைஞர் கழகம் சார்பில் பங்கு பற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக மகளிர் அணியும் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக ஆண்கள் அணியும் சாம்பியன்களாகதெரிவு செய்யப்பட்டன.

இறுதிப்போட்டியில் ஏறாவூர்ப்பற்றுசார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் கோறளைப்பற்றுதெற்கு சார்பில் முறக்கொட்டாஞ்சேனை  இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.

நாணய சுழற்சியில்வெற்றிபெற்ற செங்கலடி கோல்ட்ஸ்டார் இளைஞர் கழக  அணி துடுப்பெடுத்தாடதீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 10 ஓட்டங்களைபெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடியமுறக்கொட்டாஞ்சேனை  இளைஞர் கழக  அணி 04 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஓட்டங்களின் அடிப்படையில்06 ஓட்டங்களால் செங்கலடி கோல்ட்ஸ்டார் இளைஞர் கழக அணி வெற்றி பெற்று 2025ம் ஆண்டில் சம்பியனானது.

இறுதிப் போட்டியில் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணியும் ஏறாவூர் அஹமட் பரீட்  இளைஞர் கழக அணியும் மோதின இதில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணி வெற்றி பெற்றுசம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.  

பேரின்பராஜா சபேஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .