Shanmugan Murugavel / 2021 ஜூலை 31 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ், எம்.என்.எம்.அப்றாஸ்

தேசிய விளையாட்டு தினத்தை முனனிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டுத் திறனையும், உடற்பயிற்சி திறனையும் விருத்திசெய்யும் வகையில் 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் நிகழ்வானது, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் யு.எல்.எம். சாஜீத், உடற்கல்வி ஆலோசகர் ஐ.எல்.எம். இபராஹீம் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை வலய பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் இந்த உடற்பயிற்சி இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .