Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 17 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுகிடையிலான பெரு விளையாட்டு போட்டிகள் தற்போது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கல்முனையில் நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியும் கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) அணியும் தெரிவாகி இருந்தது. இறுதிப்போட்டி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அணிக்கு 11 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாக இடம் பெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பிடித்தானிய கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி 5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. வெற்றி இலக்கு 47 எனும் நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் 5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்ள 8 மேலதிக ஓட்டங்களால் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி கல்முனை வலய கிரிக்கெட் சாம்பியன் அணியாக தெரிவாகியது.
24 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
35 minute ago