2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கல்முனையில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு விழா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வின்னர்ஸ் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கமானது, அரங்கின் ஸ்தாபகர் ஆசிரியர் யூ.எல்.எம். ஹிலாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கலந்து கொண்டு பூப்பந்தாட்ட உள்ளக அரங்கினை திறந்து வைத்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். வாஹீட், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் உட்பட பிராந்திய விளையாட்டுக் கழகங்களின் பிரதானிகளும் வீரர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .