Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவள விழாவை முன்னிட்டு 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர் ஒன்றியம் நடாத்திய மகளிருக்கான பவளவிழா எல்லே சுற்றுப்போட்டி கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றது.
2000 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான 20 பழைய மாணவிகள் அணியினர் இவ் எல்லே சுற்றுப்போட்டி யில் இரண்டு நாட்கள் பலத்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத்தலைவர் என்.றிஷான்த் தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் கலந்துக்கொண்டார்
அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சஞ்சீவன், ஏ. பார்த்திபன் , கல்லூரி அதிபர் எம். சுந்தரராஜன் ,ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா, கே. செல்லத்துரை, ஆசிரிய ஆலோசகர் எஸ்.சிவபரன் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி டாக்டர் ஜீவராணி, பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
20 அணிகள் இரண்டு நாட்களாக கலந்து கொண்ட இச் சுற்றுப் போட்டியில் 38 போட்டிகள் இடம் பெற்று இறுதிப் போட்டி 2017 ராவணா அணியினருக்கும் 2019 ஸ்பார்ட்டன் அணியினருக்கும் இடையே நடந்தது.
இறுதிப்போட்டியில் 2017 ராவணா அணி வெற்றி பெற்றது.
அவர்களுக்கான வெற்றி கிண்ணங்கள் அதிதிகளாக வழங்கி வைக்கப்பட்டன. கற்பித்த ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டார்கள்.
வி.ரி.சகாதேவராஜா
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago