2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவு கூடைப்பந்தாட்ட இளைஞர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (20) அன்று இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் கல்முனை அணியும் மோதின. காரைதீவு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய கூடைப்பந்தாட்ட இளைஞர் கழக அணி கூடைப்பந்தாட்ட போட்டியில்  2025 ம் ஆண்டில் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X