Mayu / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய
மாணவிகள் பிரகாசித்துள்ளனர்.
இப்போட்டியில் பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்
பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

இதில், பா. கிசாளினி 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் 80 கிலோ கிராம் எடையைத் தூக்கி
முதலாமிடத்தையும், த. வன்சிகா 64 கிலோ கிராம் எடைபிரிவில் 44 கிலோ கிராம் எடையைத் தூக்கி முதலாமிடத்தையும், க. அபிசாளினி 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் 70 கிலோ கிராமைத் தூக்கி இரண்டாமிடத்தையும், ச. அனுஷா 59 கிலோ கிராம் எடைப் பிரிவில் 61 கிலோ கிராம் எடையைத் தூக்கி மூன்றாமிடத்தையும் பெற்று பாடசாலைக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஞானஜீவன் ஆசிரியர் இவர்களுக்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026