Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக் கழகம் நடத்திய, ஜே.சபீல் ஞாபகார்த்த மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது.
தைக்காநாகர் ஸஹ்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த இச்சுற்றுப் போட்டியின் அரையிறுதி, இறுதிப் போட்டிகள், கடந்த வெள்ளிக்கிழமை (30) இரவு நடைபெற்றன.
முதலில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஒலுவில் லெவின் ஸ்டார் அணியும் இறக்காமம் ஹொலிவூட் அணியும் மோதின. இதில் லெவின் ஸ்டார் அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றுமோர் அரையிறுதிப் போட்டி, சோபர், அஸ்ஸபா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் சோபர் அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சோபர் அணியின் தலைவர், எதிரணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய லெவின் ஸ்டார் அணியினர், நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சோபர் அணியினர், 4.1 ஓவர்களில் 2விக்கெட்டுக்களை மாத்தரம் இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று, மிக இலகுவாக வெற்றிபெற்று, சுற்றுப் போட்டியின் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு, சபீல் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தையும், 20,000 ரூபாய் பணப்பரிசிலையும் தனதாக்கிக் கொண்னர்.
பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எல் தவம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago