Shanmugan Murugavel / 2023 ஜனவரி 04 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கால் நடாத்தப்பட்ட பி தர கழகங்களுக்கிடயிலான கால்பந்தாட்டத் தொடரில் மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
28 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியானது மருதமுனை மசூர் மெளலானா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிலையில், மருதமுனை யுனிவரஸ் அணியை வென்றே மருதம் சம்பியனாகி ஏ தர கழகமாகியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 20ஆவது நிமிடத்தில் மருதம் விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரர் எம்.எச். சுஜைத் முதலாவது கோலைப் பெற்று தனதணிக்கு முன்னிலையை வழங்கியவாறு முதற் பாதி முடிவுற்றது. பின்னர் 55ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பெற்று சுஜைத், தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். போட்டி முடிவடைய 15 நிமிடம் இருக்கையில் யுனிவரஸ் அணி வீரர் எம். நிகால்டீன் ஒரு கோலைப் பெற்றபோதும் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மருதம் வென்றது.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago