Shanmugan Murugavel / 2026 மே 13 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எச்.எம். சியாஜ்

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் எம்.ஆர்.எப் றீகா சம்பியனானார். ஈட்டி எறிதல், குண்டு போடுதல் மற்றும் தட்டெறிதல் ஆகிய மூன்றிலும் முதலாமிடத்தைப் பெற்றே சம்பியனானார்.
மேலும் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 20 வயது பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் எம்.ஏ.எப் ஹிஸ்னா முதலிடத்தையும், 16 வயது பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் எம்.ஏ.எப் அமானி மூன்றாமிடத்தையும் பெற்று வலய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் எம்.பீ.எம். ஜெசிம், இவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ஐ.எம் அம்ஜத் மற்றும் எம். அஹ்சாப் ஆகியோருக்கும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர்கள் அகியோர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago