Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

குறுமன்வெளி றொபின் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் களுவாஞ்சிக்குடி மக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
ஒன்பது பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் இன்டிபென்டென்ட் விளையாட்டுக் கழகத்தை வென்றே மக்ஸ் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இன்டிபென்டென்ட் 4.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து எட்டு ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்கு, ஒன்பது ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மக்ஸ் 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியன் கிண்ணத்தையும், 15,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது.
மக்ஸ் இவ்வாண்டு சம்பியனான 13ஆவது தடவை இதுவாகும்.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago