Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் பாரம்பரிய விளையாட்டு கழகம் மற்றும் புத்தளம் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த பாரம்பரிய பீல்ட் கேம் கரப்பந்தாட்டத் தொடரில் சிகோன் சாஹிரா பழைய மாணவர் அணி சம்பியனானது.
சவீவபுரம் கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஹைட்ரா சாஹிரா பழைய மாணவர் குழுவோடு மோதிய சிகோன் பழைய மாணவர் அணி சம்பியனானது.
இத்தொடரின் முக்கிய நோக்கம் புத்தளம் சாஹிரா கல்லூரி வளாகத்தில் சகல வசதிகளுடனான புதிய கரபந்தாட்டத் திடலை நிறுவுதல் என்பதாகும். இதற்கான வேண்டுகோள் நிகழ்வின்போது அரசியல் தலைமைகளிடம் முன்வைக்கப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சோஷியல் கழக மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்ட அதிதிகள் இடையிலான கரபந்தாட்ட போட்டிகள் தொடரின் மகிழ்வை கூட்டின.
9 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2026