2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி கழகம் சம்பியனாகியது.

சவுண்டஸ் விளையாட்டுக்கழகத்தின் 53ஆவது ஆண்டு நிறைவையொட்டியதான அணிக்கு ஏழு பேர் கொண்ட இக்கால்பந்தாட்டத் தொடரானது கடந்த வாரயிறுதியில் சவுண்டஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது

28 கழகங்கள் பங்கு கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் வை.எஸ்.எஸ்.சி கழகத்தை எதிர்த்து மட்டக்களப்பு ஶ்ரீ முருகன் கழகம் மோதியது.

இதில், போட்டியின் வழமையான ஆட்டநேர முடிவில் இரண்டு கழகங்களும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று போட்டி சமநிலை பெற பெனால்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது.

பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் வென்ற வை.எஸ்.எஸ்.சி கழகம் சம்பியனாகியது.

இத்தொடரின் பரிசளிப்பு வைபவம் சவுண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். நஜிமுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. ரமழான், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எல். லத்தீப் உட்பட பலரும் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .