R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
7ஆவது சர்வதேச முய்தாய் சாம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி வெள்ளிக்கிழமை(23) அன்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது,
இப் போட்டியில் 03 தங்கப்பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கல பதக்கங்கள் உட்பட10 பதக்கங்களை வென்றது.
இந்தப்போட்டியை சர்வதேச மற்றும் முய்தாய்கூட்டமைப்புகள் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை தாய்லாந்தின் பாங்காக்கில் ஏற்பாடு செய்தன.
இப்போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த 1,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப்போட்டியில், ஏ.ஏ. சஹ்லான்,சஷேன்களுபோவில மற்றும் எம்.ஆர்.எம். ஷாஹல் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தார்.
இதேபோல், எம்.ஐ.எம். இமாம்,சந்தேஷ் தீக்ஷனா, சன் சிலு தனஞ்சய மற்றும் திஸரஅஞ்சனா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தனர்.
மேலும்,இந்தப்போட்டியில் குமுதுபிரசன்னா, சமத்ராஜபக்ஷ மற்றும் ருசிருரங்கநாத் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இந்த வீரர்களின் பெற்றோர் குழு அவர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.


டி.கே.ஜி. கபில
34 minute ago
36 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
40 minute ago
2 hours ago