Shanmugan Murugavel / 2025 மே 20 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தை செப்பனிடும் இரண்டாம் கட்டப் பணி பாராளுமன்ற உறுப்பினரான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் சனிக்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட செப்பனிடும் பணியில் பல கனரக இயந்திரங்களைக் கொண்டும் விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்புடனும் மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற வகையிலும் செப்பனிடப்பட்டு, அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளும் செவ்வனே இடம்பெற்றன.
செப்பனிடும் பணியானது ஆதம்பாவாவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தை செப்பனிடுவதற்கு இயந்திரங்களைத் தந்துதவிய கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கு ஆதம்பாவா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
34 minute ago
36 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
40 minute ago
2 hours ago