Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் ரவிசாந்
யாழ்.திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையமும், விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய 2019 ஆம் ஆண்டிற்கான தீபாவளி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (27) திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது சதுரங்கப் போட்டியில் கழகங்கள் விளையாடின.
அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று முற்பகல்-10 மணி முதல் கழக அங்கத்தவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கலாசாரப் போட்டிகள் என்பன நடாத்தப்பட்டன.
குறிப்பாக ஈட்டி எறிதல், வாத்து வளையம் வீசுதல், பேணிக்குப் பந்தால் எறிதல், பூதத்தின் வாய்க்குப் பந்தால் எறிதல், யானைக்கு கண் வைத்தல், சங்கீதக் கதிரை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், சதுரங்கம், கரம் விளையாட்டு, பூப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்பட்டன.
மேற்படி, போட்டிகளைப் பெருமளவானோர் கண்டு களித்ததுடன் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .