2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய கபடி அணிக்கு நிந்தவூரிலிருந்து மூவர்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

இலங்கையின் தேசிய கபடி அணியின் முதலாவது கட்டத் தெரிவில், அம்பாறை மாவட்ட நிந்தவூரில் இருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் வீரர்களான அஸ்லம் சஜா, எச்.எம்.எம். ஹாலிஸ், எ.எ. அப்லால் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் அடுத்தாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய மட்ட விளையாட்டுப் போட்டியில், கபடி போட்டிக்காக வீரர்களை தயார்படுத்தும் முகமாக இலங்கை கபடி சம்மேளனத்தால், கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அணி வீரர்கள்  முதலாவது கட்டதெரிவில் இவர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் திறமையை இனங்கண்டு தெரிவு செய்த தேசிய கபடி சம்மேளனத்தினருக்கும் இவர்களுக்கு பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் கீத்துக்கும் மற்றும் மதீனா விளையாட்டு கழகத்தின் தலைவர் எ.எம். அன்சார் உட்பட கழக சிரேஷ்ட வீரர்களுக்கும் இவர்களுக்கு ஆரம்பம் முதல் இதுவரையும் பயிற்சி மற்றும் ஆலோசனையை வழங்கி வரும் ஆசிரியர் எஸ்.எம். இஸ்மத்  ஆகியோருக்கு அம்பாறை மாவட்ட கபடி சம்மேளனத்தின் தலைவர் எ.எல். அனஸ் அஹ்மட் உட்பட்ட உறுப்பினர்கள் நன்றியினை தெரிவித்தனர்.

அஸ்லம் சஜா,  எச்.எம்.எம். ஹாலிஸ் ஆகியோர்  இலங்கை கபடி அணியின் மூலம் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற  போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X