2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தேசியம் சென்ற எருக்கலம்பிட்டி இளைஞர் கழகம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கால்பந்தாட்டத்தில் நாகவில்லு எருக்கலம்பிட்டி இளைஞர் கழக அணி புத்தளம் மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் பங்கேற்றுள்ளது.

பதுளையில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற காலி மாவட்ட இளைஞர் கழக அணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நாகவில்லு எருக்கலம்பிட்டி இளைஞர் கழக அணி தோற்றிருந்தது.

ஆசிரியர் ஐ.எம். கியாஸ் மற்றும் புத்தளம் ரத்மல்யாய வட்டார குழு உறுப்பினர் எம்.எப்.எம். ஜாஹித் ஆகியோர் குறித்த இந்த அணியினை வழி நடாத்தி பதுளைக்கு அழைத்து சென்றிருந்தனர். 

இதற்கு முன்னின்று பல அர்ப்பணிப்புக்கு மத்தியில் இவர்களுக்கான பொருளாதார உதவிகளை ஏற்பாடு செய்த எம்.ஜே.எம். சிறாஜ், இவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திய கழக தலைவர் ஆர். நிஸாத், செயலாளர் ஏ.எம். அஹதீர், மற்றும் உறுப்பினர்கள், வீரர்களுக்கு பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் என்.எம். அப்ரார் ஆகியோருக்கு ஊர் சார்பாகவும்,கழக உறுப்பினர் சார்பாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .