Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 05 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்றது.
இதில் கல்முனை வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணி கல்முனை சாஹிராக் கல்லூரி, கல்முனை உவெஸ்லி ஆகிய அணிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணியை எதிர்த்தாடி வெற்றி பெற்று, இவ்வருடத்திற்கான சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு இவ் வெற்றிக்காக ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய கல்லூரி முதல்வர் ஏ. அப்துல் கபூர் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய பாடசாலை கிரிக்கெட் பொறுப்பாசிரியர் எம்.எஸ்.எம்.சாபீர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.எஸ். இன்பாத் மௌலானா ஆகியோருக்கும்
ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களான ரீ.எம்.தன்ஸீப், எம்.ஏ.எம். ஹிஜாஸ் அன்வர், எம்.எம்.எம். ஹாஸிக்,விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் எம்.ஐ. முஹம்மட் அஸ்மி, இணைப்பாடவிதானத்தின் பொறுப்பான உதவி அதிபர் எம்.எம்.எம். உவைஸ், ஏனைய பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கும் அஷ்ரக்கியன் சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
எம்.எஸ்.எம்.ஸாகிர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago