Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் எருக்கலம்பிட்டி மர்ஹூம் களான ஏ.எல். அன்பஸ் மற்றும் ஏ.எச்.எம்.அப்ஸிர் ஞாபகார்த்தமாக நடைபெற்ற டொமினோ பிரீமியர் லீக் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் புத்தளம் எருக்கலம்பிட்டி டொமினோ பார்க்கில் இரவு ஆட்டமாக மின்னொளியில் 04 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
இந்த லீக் தொடரில் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் தொடரில் சமர் செய்த அணிகளில் டொமினோ ஸ்டார்ஸ், டொமினோ டைட்டன்ஸ், டொமினோ ரொக், டொமினோ பவர் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ப்லே ஆப் சுற்றில் அபாரமாக விளையாடிய டொமினோ ஸ்டார்ஸ் மற்றும் டொமினோ பவர் ஆகிய அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
பார்வையாளர் களினதும், வீரர்களினதும் மிகுந்த ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டொமினோ ஸ்டார்ஸ் அணி, டொமினோ பவர் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
தொடரில் பங்குகொண்ட சகல போட்டிகளிலும் டொமினோ ஸ்டார்ஸ் அணியினர் வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டார்.
தொடரில் சாம்பியன் ஆன டொமினோ ஸ்டார்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட டொமினோ பவர் அணிக்கும் வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப் பரிசு வழங்கப்பட்டது.
சாம்பியன் கிண்ணத்திற்கு தொழிலதிபர் ஏ.ஜி.எம்.அஸாருதீன் அனுசரணை வழங்கி இருந்ததுடன், பணப்பரிசினை தொழிலதிபர் எச்.எம். இக்ராம் வழங்கி வைத்தார்.
இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட அணிக்கான கிண்ணத்திற்கு அல்ஹிக்மா விளையாட்டு கழகம் அனுசரணை வழங்கி இருந்ததுடன், அவர்களுக்கான பணப்பரிசினை தொழிலதிபர் ஏ.ஜி.எம். அஸாருதீன் வழங்கி வைத்தார்.
வளர்ந்து வரும் இளம் வீரருக்கான பணப்பரிசினை டொமினோ ஸ்டார்ஸ் அணியின் எஸ்.ருஷ்தி பெற்றுக் கொண்டதுடன், அவருக்கான பணப்பரிசை தொழிலதிபர்களான ஏ.ஜி.எம். அஸாருதீன் மற்றும் ஜே.எம். சப்ரீன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago