2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் டென்னிஸ் திடலுக்கு அடிக்கல்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் உள்ளக விளையாட்டு அரங்க வளாகத்தில், புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவினரின் ஆசிர்வாதத்துடன் புத்தளத்தின் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கூடிய முக்கியமான விளையாட்டு வளாகமாக அமையவுள்ள டென்னிஸ் திடலுக்கான அடிக்கல் நாட்டும் விழா வியாழக்கிழமை (25) நடைபெற்றது.

புத்தளம் மாநகர சபை மேயர் ரின்சாத் அஹ்மதின் வேண்டுகோளின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகளை மேம்படுத்தி சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்ல இந்த புதிய விளையாட்டுத் திடல்  ஒரு முக்கிய கட்டமாக அமையும் அதேவேளை இதன்மூலம் புத்தளம் இளைஞர்கள் தங்களது திறமைகளை உலகிற்கு காட்டும் ஒரு மேடையாக உருவாகும் என அஹ்மத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X