Editorial / 2026 மார்ச் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
வலய மட்டத்திலான பெருவிளையாட்டுப் போட்டிகளில் உடுவில் மகளிர் கல்லூரியானது பூப்பந்தாட்டத் துறையில் இரண்டு முக்கிய வெற்றிகளைச் சுவீகரித்துள்ளது.
அந்த வகையில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுச் சம்பியனாகத் தெரிவானதுடன், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது. இந்த வெற்றிகளின் மூலம் உடுவில் மகளிர் கல்லூரி அணிகள் மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளன.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பாடசாலைச் சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026