2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெரியகல்லாறு மைதானத்தில் விளையாடுவதற்கு அனுமதி

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ. சக்தி

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவது தொடர்பாக கடந்த மூன்று மாதமாக ஏற்பட்டு வந்த சர்ச்சைக்கு வெள்ளிக்கிழமை(29) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் விஷேட கூட்டத்தில் தீர்வு கானும் பொருட்டு சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் ஆராயப்பட்டது.

பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதனால் பாதிப்புக்கள் ஏற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த நாகதம்பிரன் ஆலய பரிபாலன சபையினரும் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வசித்து வரும் பொது மக்களும் பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு அமைவாக சபையின் தீர்மானப்படி பிரதேச விளையாட்டு அதிகாரியின் அறிக்கையைப் பெற்று அதன்படி செயற்படுமாறு கோரியதற்கு அமைவாக விளையாட்டு அதிகாரி குறித்த மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக சாதக பாதக அறிக்கையைசமர்ப்பித்திருந்தார். 

அதற்கமைய தற்காலிகமாக கடினப்பந்து விளையாடுவதற்கு பிரதேச சபையால் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை அகற்றக் கோரி பொரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பல விளையாட்டுக் கழகங்கள் கோரியதுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தனர்.

பின்னர் கடந்த மாதம் 21ஆம் திகதி அன்று பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி க. றஞ்சினி தலைமையில் கூடிய பிரதேச சபை அமர்வின்போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டன. அதன்போது ஏற்பட்ட வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் 29.10.2021 அன்று விஷேட கூட்டம் கூட்டி தீர்வு காண்பது என்றும், பெரியகல்லாற்றுக்கு களவிஜயம் செய்த முறைப்பாட்டாளர்களின் கருத்தை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது கூடிய சபையிடம் விளையாடுவதாயின் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டு செய்யுமாறும், விளையாடுகின்றவர்கள் மைதானத்தினுள் விளையாடும் போது அயலவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும் எனவும் வார்த்தை பிரயோகங்கள் முறைமைப்படுத்தப்பட்டு அமைய வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுஇதன்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பெரியகல்லாறு பொது மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவதற்கு பிரதேச சபையால் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை அகற்றுவதற்கு கலந்து கொண்ட உறுப்பினர்களிடம் இதன்போது தவிசாளரால் கருத்து கோரப்பட்டதற்கு அமைவாக  பத்து பேர் தடையை நீக்க வேண்டும் எனவும், இருவர் தடையை நீக்குவது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றது எனவும், இருவர் நடுநிலையாக செயற்பட்டதன் பிரகாரம், தவிசாளரால் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துப்படி  ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்குவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .