2026 மே 15, வெள்ளிக்கிழமை

மன்/ வட்டக்கண்டல் அ.த.க மாணவிகளுக்கு உபகரணங்கள்

Shanmugan Murugavel   / 2026 மே 13 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்னர் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளான ஆர். மேரி தயானா மற்றும் எஸ். தமிழினி ஆகிய இரண்டு மாணவிகளும் வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளமையை பாராட்டி குறித்த இரு மாணவிகளையும் மனோன்மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபகர் அகஸ்டின் சவேரியான் வழிநடத்தலில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியான மேரி தயானா வடக்கு மாகாண பெண்கள் கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்து விளையாடி வருவதை பாராட்டியும்,  அதே பாடசாலையைச் சேர்ந்த   எஸ். தமிழினி எனும் மாணவி வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து வடக்கு, வடமேல் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கிய சுப்பர் புரவின்ஸ் அணிக்கு தெளிவாகி  தற்சமயம் தம்புள்ளை சர்வதேச கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்கின்றமையை பாராட்டியும் குறித்த இரு மாணவிகளுக்கும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (12) காலை ஒன்று கூடலில் குறித்த இரு மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மனோன்மணி அறக்கட்கட்டளையால் வழங்கி வைக்கப்பட்டது.

வாராந்தம் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்று வரும் தமிழினிக்கான போக்குவரத்து செலவீனங்களை பொறுப்பேற்கும் முகமாக பயிற்சி காலம் முடிவுறும் வரை மாதாந்தம் ரூபாய் 20,000/= போக்குவரத்து கொடுப்பனவும் மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .