2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னார் பிறீமியர் லீக் தொடர்பில் பிரதி நிதிகளுக்குமிடையில் சந்திப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட்

 மன்னார் மாவட்ட கால்ப்பந்தாட்ட லீக்கினால்  2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் '  என்னும் மாபெரும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ள நிலையில் குறித்த போட்டியில் பங்குபற்றவுள்ள 10 அணிகளின் பிரதி நிதிகளுக்கும்,மன்னார் மாவட்ட கால்ப்பந்தாட்ட லீக்கிற்கும் இடையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

மன்னார் மாவட்ட கால்ப்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப் பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.குறித்த சந்திப்பில் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் ப.ஞானராஜ், மன்னார் மாவட்ட கால்ப்பந்தாட்ட லீக் பிரதி நிதிகள்  முகாமையாளர்கள் , உதவியாளர்கள், பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மன்னார் பிறீமியர் லீக் சுற்று போட்டி தொடர்பாக வும், உரிமையாளர்களின் செயற்பாடுகள்,வீரர்கள் தெரிவு செய்யும் முறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி குறித்த போட்டி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்   ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .