Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 05 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கோலாகலமாக இடம் பெற்றது.
வேல்முருகன் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 02ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் 4 கல்வி வலயங்களில் இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொண்டு ஆரம்பித்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் சனிக்கிழமை (01)ஆரம்பித்து வைக்கப்பட்டு இரண்டு நாட்களாக இடம்பெற்றது.
16 பாடசாலை அணிகள் மோதிய இத்தொடரில் நகர்ப்புற தேசியப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு பலத்த போட்டியின் மத்தியில் 03/00 கோள் வித்தியாசத்தில் முதலாவது இடத்தை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் வெற்றி கிண்ணத்தையும் 100,000/= பெறுமதியான விளையாட்டுப் பொருட்களையும் தம்வசப்படுத்தி கொண்டனர்.
இத்தொடரின் சிறந்த தொடர் ஆட்டநாயகியாக ஏஸ்.ரூவனிதா,
இறுதிப் போட்டியின் சிறந்த ஆட்டநாயகியாக பி.ரேணுஸ்கா மற்றும் இத்தொடரின் சிறந்த கோல் கீப்பர் ஆக ஆர்.பிரியதர்ஷனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தொடரில் அதிகூடிய கோள்களை போட்ட கட்டுமுறிவு என்.நந்தினி அவர்களுக்கு அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாக துவிச்சக்கர வண்டி சிறப்பு பரிசாக வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago