Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நவி

சவாட் கிக் பொக்ஸிங் குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியில் கண்டி மாவட்டம் முதலாமிடத்தைப் பிடித்தது.
இரத்தினபுர பிரதேசத்தில் அண்மையில் நடைப்பெற்ற சவாட் கிக் பொக்சிங் விளையாட்டுப் போட்டியில் ஒன்பது மாகாணத்திலுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
சவாட் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் டி.எம். நவுசாட் தலைமையில் மத்திய மாகாணத்திலிருந்து 49 மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர்.
இதில் 38 மாணவர்கள் வெற்றி பெற்று 38 பதக்கங்களைப் பெற்று வெற்றி சூடியிருந்தனர்.
27 தங்கப் பதக்கங்கள், எட்டு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்களை இம்மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி மத்திய மாகாணமானது முதலிடத்தைப் பெற்று சவாட் கிக் பொக்ஸிங் சம்பியன்ஷிப் பெற்று வெற்றியிடத்தைப் பெற்றது.
இரண்டாமிடத்தை ஊவா மாகாணம், மூன்றாமிடத்தை அம்பாந்தோட்டை பிரதேசம் கைப்பற்றியது.
இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு ஆக விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் மதியம் அந்த மாணவர்களை கெளரவிக்கு முகமாக வாகனங்களின் கம்பளை நகர் முழுவதும் பேரணியாக சென்று இருந்தனர். இதன் போது கம்பளை மக்கள் உற்காக வரவேற்பு செய்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago