Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கத்மண்டுவில் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக 58 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுநர் குழாமில் மூன்று தமிழ் பேசும் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முப்பாய்ச்சல் போட்டிகளின் தே
சியச் சம்பியனான சப்ரின் அஹமட், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான குமார் சண்முகேஸ்வரன் மற்றும் அண்மைக்காலமாக தேசிய மட்ட குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் முன்னனோடியாகத் திகழும் மொஹமட் சபான் ஆகிய மூன்று வீரர்களும் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளனர்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மெய்வல்லுநர் குழுவில் 34 வீரர்களும், 24 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் இலங்கை மெய்வல்லுநர் ஆண்கள் அணியின் தலைவராக ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்கவும், பெண்கள் அணியின் தலைவியாக 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான வீராங்கனையான நிமாலி லியனாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், இலங்கை மெய்வல்லுநர் அணியின் முகாமையாளராக இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் உப தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .