2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மெய்வல்லுனர் போட்டியில் களுதாவளை மாணவன் சாதனை

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டபடிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த குகன்பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதுக்குட்பட்ட  ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு புதிய சாதனையைப் படைத்து முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) இப்போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

.சக்தி       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .