Janu / 2026 மார்ச் 31 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியில் கிரிக்கெட் பயின்ற ஆகாஷ், இந்த பருவகாலத்திலேயே புனித ஜோசப் கல்லூரியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டி விபரம்: முதலாவது இன்னிங்ஸில் புனித பீட்டர்ஸ் கல்லூரி 204 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி 187 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
17 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய புனித பீட்டர்ஸ் அணிக்கு ஆகாஷ் பெரும் சவாலாக அமைந்தார். ஒருகட்டத்தில் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணி, அடுத்த 20 ஓட்டங்களுக்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இறுதியில் புனித பீட்டர்ஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 79 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
97 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடி வரும் புனித ஜோசப் கல்லூரி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. புனித ஜோசப் அணி வெற்றி பெற இன்னும் 94 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
சுருக்கமான ஸ்கோர் விபரம்:

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago